எழுத்தாளரும் பதிப்பாளரும்

இந்நாள்களில் எழுத்தாளர்-பதிப்பாளர் உறவு ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. எழுத்தாளராகவோ பதிப்பாளராகவோ இல்லாதோரும் பேசுகிறார்கள். அக்கப்போர் என்றாகிவிட்டால் ஆளுக்கொரு தர்ம அடி போட்டுவிட்டுப் போய்விடுவது தேசிய குணமல்லவா? இருக்கட்டும். சிறிது வேறு மாதிரியான எழுத்தாளர்-பதிப்பாளர் உறவு குறித்து ஒரு தகவல் படிக்கக் கிடைத்தது. நல்லதையும்தான் பேசிப் பார்ப்போமே. அவர் ஒரு புலவர். ஆன்மிகம் சார்ந்து மட்டுமே எழுதுவார். பெரிய விருத்தப் புலி. அவ்வளவு எளிதில் புரிந்துவிடாத சங்கதிகளையெல்லாம் ஆக எளிய தமிழில் பாக்களாக்கிவிடக் கூடியவர். என்ன ஒன்று, தாம் எழுதியவற்றை … Continue reading எழுத்தாளரும் பதிப்பாளரும்